காமராஜர் மணிமண்டபத்தை முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

ரூ.25 கோடி செலவில் 12 ஏக்கர் பரப்பளவில் விருதுநகரில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தை முதல் அமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.
காமராஜர் மணிமண்டபத்தை முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
Published on

சென்னை,

விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை சார்பில் அதன் அறங்காவலரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் காமராஜருக்கு மணிமண்டபம் அமைத்துள்ளார். அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற விழாவில், காணொலி காட்சி மூலம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மணிமண்டபத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காமராஜர் மணிமண்டபம் ரூ.25 கோடி செலவில் 12ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இந்த விழாவில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் மற்றும் தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர்ராஜூ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com