கரூர் கூட்ட நெரிசலுக்கு அதிகாரிகள் அலட்சியமே காரணம்: பாஜக எம்பிக்கள் குழு அறிக்கை தாக்கல்?

கரூர் கூட்ட நெரிசலுக்கு நிர்வாக அலட்சியமே காரணம் என்று தேஜகூ எம்.பி.க்கள் குழு அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலுக்கு அதிகாரிகள் அலட்சியமே காரணம்: பாஜக எம்பிக்கள் குழு அறிக்கை தாக்கல்?
Published on

கரூர்,

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க பாஜக குழு ஒன்றை அமைத்தது. ஹேமமாலினி எம்.பி. தலைமையிலான இந்த குழுவில் அனுராக் தாகூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே, அபராஜிதா சாரங்கி, ரேகா சர்மா, புட்டா மகேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.இந்தக் குழுவினர் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசினர்.

இதையடுத்து, எம்.பி.க்கள் குழு பாஜக தலைமையிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், அரசு அதிகாரிகளே கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு காரணம். கரூர் மாவட்ட நிர்வாகம் முறையாக விளக்கம் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com