பெண் போலீஸ் ஏட்டுக்கு பாராட்டு

தேசிய போட்டிக்கு தகுதிபெற்ற பெண் போலீஸ் ஏட்டுக்கு, தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பாராட்டு தெரிவித்தார்.
பெண் போலீஸ் ஏட்டுக்கு பாராட்டு
Published on

தேனி ஆயுதப்படை பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருபவர் பிரியா. இவர் பல்வேறு துப்பாக்கிச்சுடும் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளார். இந்தநிலையில் கடந்த 18-ந்தேதி திருவனந்தபுரம் ரைபிள் கிளப் சார்பில் கேரள மாநிலத்தில் நடந்த தென்னிந்திய அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டியில் பிரியா பங்கேற்றார். அப்போது அவர் 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். மேலும், விரைவில் நடக்கவுள்ள தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டியில் பங்கேற்கவும் அவர் தகுதி பெற்றார். இதையடுத்துதேசிய போட்டிக்கு தகுதிபெற்ற பிரியாவுக்கு, தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பாராட்டு தெரிவித்தார். அப்போது ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு இளமாறன் உடனிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com