தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டதாகக்கூறி, நாம் தமிழர் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நாளை நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
File image
File image
Published on

சென்னை,

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்த உள்ளதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைபாளர் சீமான் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

பேரன்பு கொண்டு நாங்கள் பெரிதும் நேசிக்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

தமிழகத்தில் தொடர்ந்து நிலவிவரும் படுகொலைகள், சீர்கெட்ட சட்டம்-ஒழுங்கு, மின்கட்டண உயர்வு இவற்றையெல்லாம் கண்டித்து,

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நாளை (04-08-2024) காலை 11 மணிக்கு மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை!

இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!

நாம் தமிழர்!

இவ்வாறு அதில் கூறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com