

சென்னை,
கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:- நமது தேச விடுதலைக்காக மகத்தான தியாகங்களை செய்த நேதாஜி மற்றும் அவரின் துணிச்சலான வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவு கூர்கிறது. இந்நாளில் அவர்கள் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசை நிறுவினர். அவர்களது கனவு களின்படி 2047-க்குள் இந்தியாவை கட்டமைக்க உறுதி ஏற்போம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.