குடிநீர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

குடிநீர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல் ஆனது.
குடிநீர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
Published on

குளித்தலை அருகே உள்ள சிவாயம் ஊராட்சிக்குட்பட்ட ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 12-ந்தேதி குளித்தலை அருகே மணத்தட்டை பகுதியில் கரூர்-திருச்சி புறவழி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் உள்ள ஒரு கடையில் குடிநீர் பாட்டில் வாங்கியுள்ளார். அந்த பாட்டிலை தனது இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு கரூர் நோக்கி அவர் சென்றுள்ளார். சிறிது தூரம் சென்ற பின்னர் தண்ணீர் குடிப்பதற்காக அந்த பாட்டிலை எடுத்தபோது, அந்த பாட்டில் உள்ளே இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து அவர் அப்போது எந்த ஒரு துறை அதிகாரியிடமும் புகார் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. பாட்டிலில் பல்லி இறந்து கிடந்த தகவல் குறித்து அவர் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து குடிநீர் பாட்டிலில் பல்லி இறந்து கிடந்தது தொடர்பாக தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலானது. இதுகுறித்து அந்த தனியார் குடிநீர் நிறுவன உரிமையாளரிடம் கேட்டபோது, தொழில் போட்டியின் காரணமாக பொய்யான குற்றச்சாட்டை தன் மீது சுமத்துவதாக தெரிவித்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வாலிபர் மற்றும் குடிநீர் தயாரிக்கும் நிறுவனத்தினரிடம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com