பெண்கள் இப்போது ஆண் பாதுகாவலர் இல்லாமல் ஹஜ்- உம்ரா செய்யலாம் -முக்கிய அறிவிப்பு

ஹஜ் -உம்ரா செல்லும் பெண்கள் ஆண் பாதுகாவலர் இல்லாமல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
AFP
AFP
Published on

துபாய்

ஹஜ் அல்லது உம்ராவைச் செய்ய மெக்காவிற்கு செல்லும்போது, பெண்கள் இனி ஆண் பாதுகாவலருடன் இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற முக்கிய அறிவிப்பு

வெளியிடப்பட்டு உள்ளது.

ஹஜ் மற்றும் உம்ரா சேவைகள் ஆலோசகர் அஹ்மத் சலே ஹலாபி கூறியதாக அராப் நியூஸ் கூறி இருப்பதாவது;-

ஒரு பெண் ஆண் துணை இல்லாமல் ஹஜ் அல்லது உம்ராவைச் செய்வது இப்போது ஏற்றுக்கொள்ளத்தக்கது. நம்பகமான பெண்கள் அல்லது பாதுகாப்பு நிறுவனம் ஹஜ் அல்லது உம்ராவைச் செய்கிறது என்று கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்துசவூதி அரேபியாவின் ஹஜ் அமைச்சரின் முன்னாள் ஆலோசகர் இப்ராஹிம் ஹுசைன் கூறும் போது பெண்கள் ஏற்கனவே வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர், எனவே ஆண் துணையின்றி தங்கள் மதக் கடமைகளைச் செய்வதைத் தவிர்ப்பது நியாயமற்றது என்று அரசாங்கம் கருதுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆண் உறவினரின் துணையின்றி உம்ரா செய்ய பெண்களை அனுமதிப்பது அவர்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது. அவர்கள் ஏற்கனவே பல தடைகளை எதிர்கொள்கிறார்கள் மற்றும் கடினமான சமூக பொருளாதார சூழ்நிலைகளில் வாழ்கின்றனர். அவர்கள் உம்ராவைச் செய்ய ஆர்வமாக இருக்கும்போது இது ஒரு பாதுகாவலரை கண்டுபிடிப்பதை கடினமாக்கலாம் அல்லது உம்ராவை அதிக செலவுக்கு உள்ளாக்குகிறது என்று கூறினார்.

இஸ்லாமிய நாட்டிற்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கும் வகையில் விமான நிலையங்கள் மற்றும் பிற பொது இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com