

நவராத்திரி திருவிழா 9 நாட்கள் நிறைவடைந்த நிலையில் நிறைவாக விஜயதசமியையொட்டி மகரநோன்பு திருவிழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவிலில் சிவபெருமான் சந்திரசேகரராக கோவிலில் இருந்து எழுந்தருளி விருதுநகர்-மதுரை ரோட்டில் உள்ள மண்டகப்படிக்கு பாரிவேட்டைக்காக சென்றார்.
பின்னர் அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் புலிவேடமிட்டு புலியாட்டத்துடன் ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவில்களில் வித்யாரம்ப நிகழ்ச்சிகள் நடைபெற்றது. குழந்தைகள் கல்வியை தொடங்குவதற்காக சுவாமி முன்பு நெல்மணியில் அரிச்சுவடியை எழுதி பயிற்சியை தொடங்கினர். அனைத்து கோவில்களிலும் விஜயதசமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.