கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்
Published on

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட லெனின் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட மாநாடு விராலிமலை சமுதாய கூடத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு லெட்சுமணன் தலைமை தாங்கினார். தங்கவேலு முன்னிலை வகித்தார். மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மாவட்ட லெனின் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாநாட்டில் குடியிருப்பு மனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை வரும் காவிரி குடிநீரை 3 நாட்களுக்கு ஒருமுறை 45 பஞ்சாயத்துக்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பலகோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட விராலிமலை பஸ் நிலையம் பயன்படுத்தப்படாமல் இருப்பதை செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் நிலையம் எதிர்புறம் உள்ள புறம்போக்கு மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலையை ஆக்கிரமித்து அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறிய நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். அரசு வழங்கிய மகளிர் உரிமைத் தொகை விடுபட்ட அனைத்து மகளிருக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட லெனின் கம்யூனிஸ்டு கட்சியின் மகளிரணி மாவட்ட செயலாளர் மாலா மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com