கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட மற்றொரு கல்லூரி மாணவன் மீட்பு

மாயமான மாணவனை தேடியபோது கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட மற்றொரு கல்லூரி மாணவனை மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.
கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட மற்றொரு கல்லூரி மாணவன் மீட்பு
Published on

சென்னை மெரினா கடற்கரையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் சாய் சரண் நேற்று முன்தினம் மாலை கடலில் குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கி மாயமானார். நேற்று காலை மெரினா கடற்கரையில் சாய் சரணை தேடும் பணியில் அண்ணா சதுக்கம் போலீசார், கடலோர காவல் படை மற்றும் மெரினா மீட்பு குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அதே பகுதியில் மற்றொரு கல்லூரி மாணவன் கடலில் குளித்தபோது திடீரென ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டான். மாணவனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சாய்சரணை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்த கடலோர காவல் படை மற்றும் மெரினா மீட்பு குழுவினர் உடனடியாக கடலில் குதித்து மாணவனை மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட மாணவன், அம்பத்தூர் பட்டரவாக்கம் பகுதியை சேர்ந்த பரமசிவம் (வயது 19) என்பது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com