

சென்னை,
தமிழகத்தில் 20 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ இடங்கள் 800 உள்ளன. 6 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 200 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்ப படிவத்தை www.tnhealth.org, www.tnmed-calseletion.org ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அதன்படி மாணவர்கள் பதிவிறக்கம் செய்யத் தொடங்கியுள்ளனர். பதிவிறக்கம் செய்வதற்கு 23-ந்தேதி கடைசி நாள். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் என்ற முகவரிக்கு 26-ந்தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்பம் கிடைத்தபின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு நடத்தப்படும்.