பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து


பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x

கோப்புப்படம் 

பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிறநாட்டின் தலைவர்கள், ஜனாதிபதி திரவுபதி முர்மு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிற மாநில முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள், பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story