

சென்னை,
தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் 24 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோச்னை நடத்தினார்.
தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா மாளிகையின் பத்தாவது தளத்தில் 19 மருத்துவ நிபுணாகளுடன் ஆலோசனையானது நடைபெற்றது. இந்த ஆலோசனையின் போது, தமிழகத்தில் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. மேலும், ஒரு வார ஊரடங்கை நீட்டித்து விட்டு சூழலை பொறுத்து முடிவு எடுக்கலாம் என மற்றொரு தரப்பு பரிந்துரைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவ நிபுணர்கள் குழுவுடனான ஆலோசனை முடிந்துள்ள நிலையில் சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் குழுவுடன் நடத்திய பிறகு ஆலோசனைக்குப் பிறகு ஊரடங்கு குறித்து அறிவிக்கப்படும் எனத்தெரிகிறது.