

சென்னை,
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளின் நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகளும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் நாளை நடக்க இருந்த செம்ஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.