சிக்கல் சிங்காரவேலர் கோவிலில்‌ சிங்கப்பூர் அமைச்சர் சாமி தரிசனம்

சிக்கல் சிங்காரவேலர் கோவிலில்‌ சிங்கப்பூர் அமைச்சர் சாமி தரிசனம்
சிக்கல் சிங்காரவேலர் கோவிலில்‌ சிங்கப்பூர் அமைச்சர் சாமி தரிசனம்
Published on

சிங்கப்பூர் நாட்டின் உள்துறை அமைச்சர் காசிவிசுவநாதன் சண்முகம் நேற்று சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்தார். பின்னர் அங்கிருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் நாகைக்கு வந்தார். நாகை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்த சிங்கப்பூர் அமைச்சரை, கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அங்கிருந்து கார் மூலம் நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் கோவிலுக்கு வந்தார். பின்னர் சுந்தரகணபதி, நவநீதேஸ்வரர், சிங்காரவேலர், வேல்நெடுங்கன்னி அம்மன் சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதை தொடர்ந்து கோவிலில் உள்பிரகாரத்தில் உள்ள சிங்காரசண்முகநாதர் சாமி சன்னதியில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்திலும் அவர் கலந்து கொண்டார். அப்போது அவருடன் கலெக்டர் அருண்தம்புராஜ், உதவி கலெக்டர் முருகேசன், தாசில்தார் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com