அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதான அரங்கத்தை பார்வையிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதான அரங்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதான அரங்கத்தை பார்வையிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Published on

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை, வகுத்துமலை அடிவாரத்தில் 66 ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் பணிகள் ரூ.44 கோடி மதிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இளைஞர் நலன், மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை ஜல்லிக்கட்டு மைதான கட்டிட பணி வரைப்படத்தை பார்வையிட்டார். அப்போது பத்திரபதிவு துறை அமைச்சர் மூர்த்தி, மற்றும் அரசு திட்ட செயலாக்க துறை செயலாளர் தாரேஸ் அகமது, ஆகியோர் வரைப்படம் குறித்து எடுத்துரைத்தனர்.

இதை தொடர்ந்து மைதான பகுதிகள், பார்வையாளர்கள் அமரும் மேல் மாடப்பகுதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட கலெக்டர் சங்கீதா, எம்.எல்.ஏ.வெங்கடேசன் மற்றும் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறை, வேளாண்மை, மின்வாரிய துறை, ஊரக வளர்ச்சி துறை, அனைத்து துறை அலுவலர்கள், மாவட்ட செய்திமக்கள் தொடர்பு அலுவலர் சாலி தளபதி மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து காண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com