அரியலூரில் ‘மியாவாக்கி’ முறையில் மரக்கன்றுகள் நடும் திட்டம் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைப்பு

அரியலூரில் ‘மியாவாக்கி’ முறையில் 7 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார்.
அரியலூரில் ‘மியாவாக்கி’ முறையில் மரக்கன்றுகள் நடும் திட்டம் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைப்பு
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தில், மியாவாக்கி முறையில் மரக்கன்றுகளை நடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மியாவாக்கி முறை என்பது ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவாக்கி என்பவரால் கண்டறியப்பட்ட காடு வளர்ப்பு முறையாகும். இதன் மூலம் சிறிய இடத்தில் அதிக அளவிலான மரக்கன்றுகளை நட முடியும்.

அந்த வகையில் அரியலூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தில், மியாவாக்கி முறையில் 7 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த முன்னெடுப்பின் மூலம் 30 வகையான மரங்கள், 10 வகையான பூச்செடிகள் என 7 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. அப்போது பேசிய அமைச்சர் ஸ்.எஸ்.சிவசங்கர், சிமெண்ட் ஆலைகளுக்குச் சொந்தமான காலவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களில் மியாவாக்கி முறையில் குறுங்காடு உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com