முஸ்லிம் லீக் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் 5 முக்கிய அறிவிப்பு

கோயம்புத்தூரில் கூடுதலாக வக்பு தீர்ப்பாயம் அமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முஸ்லிம் லீக் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் 5 முக்கிய அறிவிப்பு
Published on

தஞ்சை,

தஞ்சை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 முக்கிய அறிவிப்புகளை வழங்கினார். இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டில் கூறியதாவது;-

1. தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு பெற்ற 1537 பேருக்கு 3,000 ரூபாய் ஓய்வூதியமும், 44 உறுப்பினர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் 1,500 ரூபாயும் இப்போது வழங்கப்பட்டு வருகிறது. இனி 5,000 ரூபாய் ஓய்வூதியமாகவும், 2,500 ரூபாய் குடும்ப ஓய்வூதியமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

2. உலமாக்கள் நல வாரியத்தில் 15,060 உலமாக்கள் இருக்கின்றனர். இதில் முதற்கட்டமாக ஆயிரம் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க அரசு மாணியத்தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

3. சென்னை மற்றும் மதுரையில் வக்பு தீர்ப்பாயம் செயல்பட்டு வரக்கூடிய நிலையில் கோயம்புத்தூரில் கூடுதலாக வக்பு தீர்ப்பாயம் அமைக்கப்படும்.

4. கல்லறை தோட்டம் மற்றும் கப்ரிஸ்தான் இல்லாத இடங்களில் மாநகராட்சிகளால் அரசின் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை அமைக்கப்படும்.

5. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கக்கூடிய 10 உருது மொழி ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com