

சென்னை,
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, ஐ.நா.சபை பொதுச்செயலாளராக இருந்த கோபி அன்னான், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேர், கேரளாவில் பெருமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 373 பேர் ஆகியோரது மறைவுக்கு தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* போட்டியிட்ட 13 முறையும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றும், 2 முறை சட்ட மேலவை உறுப்பினராக இருந்தும் மொத்தம் 60 ஆண்டுகள் உறுப்பினராக, தமிழகத்தில் இதுவரை யாரும் உருவாக்காத சரித்திரத்தை படைத்தவர் கருணாநிதி. பேரறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், பிறகு 19 ஆண்டுகள் தமிழக முதல்-அமைச்சராகவும் இருந்து அரும்பணி ஆற்றியவர் கருணாநிதி.
தமிழகத்தை முன்னேற்ற பாதையில் மீண்டும் செலுத்துவோம்; இன-மொழி பெருமையை பேணுவோம்; அதுவரை மெய் வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது அயராது உழைப்போம்; அதற்கான சூளுரையை இன்றே இப்போதே மேற்கொள்வோம். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பொருளாளராக தேர்வு செய்யப்பட்ட துரைமுருகன் பேசியதாவது:-