அனைத்து மதங்களிலும் தீவிரவாதிகள் உள்ளனர் நாராயணசாமி பேட்டி

அனைத்து மதங்களிலும் தீவிரவாதிகள் உள்ளனர். எனவே தீவிரவாதம் முற்றிலும் ஒடுக்கப்பட வேண்டும் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
அனைத்து மதங்களிலும் தீவிரவாதிகள் உள்ளனர் நாராயணசாமி பேட்டி
Published on

காரைக்கால்,

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி காரைக்கால் வந்தார். இங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காங். கூட்டணிக்கு சாதகம்

நடந்து முடிந்த 6 கட்ட நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு சாதகமான சூழ்நிலை காணப்பட்டது. இந்த தேர்தலில் 160 தொகுதிகளில் கூட பா.ஜனதா வெற்றி பெற முடியாது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற அணிதான் ஆட்சியமைக்கும். ராகுல்காந்தி தான் பிரதமராக வருவார்.

கடந்த தேர்தலின்போது பல பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த தேர்தல் பிரசாரத்தின்போது அவருடைய ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட எந்த திட்டத்தையும் பற்றி மக்களிடம் பேசவில்லை. திட்டங்களை நிறைவேற்றி இருந்தால்தானே பேச முடியும். மேலும் மதத்தை முன்னிறுத்தி பா.ஜனதா கட்சி வாக்குகளை சேகரிக்க முயற்சி செய்தது. அதை மேற்குவங்காள மாநிலத்தில் அந்த மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முறியடித்துள்ளார்.

அனைத்து மதங்களிலும் தீவிரவாதம்

அனைத்து மதங்களிலும் தீவிரவாதிகள் உள்ளனர். மக்களை அழிக்கும் தீவிரவாதம் முற்றிலும் ஒடுக்கப்பட வேண்டும்.

புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் இந்த 3 ஆண்டுகளில் ரவுடிகள் மாமூல் வாங்குவது ஒடுக்கப்பட்டுள்ளது. தற்போது வில்லியனூரில் புதிதாக ரவுடிகள் பிரச்சினை உருவாகி இருக்கிறது. ரவுடிகள் யாராக இருந்தாலும் அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com