அந்தியூர் அருகே தீ விபத்தில் குடிசை எரிந்து நாசம்

அந்தியூர் அருகே தீ விபத்தில் குடிசை எரிந்து நாசமானது.
அந்தியூர் அருகே தீ விபத்தில் குடிசை எரிந்து நாசம்
Published on

அந்தியூர்

அந்தியூர் அருகே ஒலகடம் கூனக்காபாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் குடும்பத்துடன் குடிசையில் வசித்து வருகிறார். நேற்று காலை 6 மணி அளவில் குடும்பத்தினருடன் ஈஸ்வரன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டில் இருந்து கரும்புகை வந்தது. இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று தூங்கிக்கொண்டிருந்த ஈஸ்வரனின் வீட்டு கதவை தட்டி எழுப்பினர். உடனே ஈஸ்வரன் தனது குடும்பத்தினருடன் வெளியில் வந்தார். இதனால் அவர்கள் அனைவரும் உயிர் தப்பினர். இதனிடையே குடிசையில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும், அந்தியூர் தீயணைப்பு நிலைய அதிகாரி ராபர்ட் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும், இந்த தீ விபத்தில் குடிச வீடு எரிந்து நாசம் ஆனதுடன், வீட்டில் இருந்த ஆதார் கார்டு, வங்கி புத்தகம், உணவு பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பல் ஆகின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com