நரிக்குடி அருகே புதிய தார்ச்சாலை

நரிக்குடி அருகே புதிய தார்ச்சாலையை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.
நரிக்குடி அருகே புதிய தார்ச்சாலை
Published on

காரியாபட்டி, 

விருதுநகர் மாவட்டத்தின் கடைசி எல்லை பகுதியாகவும், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் ஆரம்பப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சாலை வசதிகள் இல்லாமல் அப்பகுதி மக்கள் போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இ்ந்த பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கல்விமடை முதல் ஆளாத்தூர் வரை புதிய சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நரிக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் கமலி பாரதி, முன்னாள் யூனியன் தலைவர் ஜெயராஜா, மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் பால செல்லப்பா, ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் கோபாலகிருஷ்ணன், வேளானேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், பள்ளபட்டி வீராச்சாமி, வாவா பகுருதீன், கமலி மருது, திருச்சுழி தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com