நித்யானந்தாவின் 'கைலாசா' நாட்டிற்கு விசா பெறுவதற்கான நடைமுறை என்ன? விசாரித்த பிரபல கிரிக்கெட் வீரர்

நித்யானந்தாவின் 'கைலாசா' நாட்டிற்கு விசா பெறுவதற்கான நடைமுறை என்ன? என பிரபல கிரிக்கெட் வீரர் அஷ்வின் கேள்வி எழுப்பி உள்ளார்.
நித்யானந்தாவின் 'கைலாசா' நாட்டிற்கு விசா பெறுவதற்கான நடைமுறை என்ன? விசாரித்த பிரபல கிரிக்கெட் வீரர்
Published on

சென்னை,

தமிழகத்தில் பிறந்த நித்யானந்தா இன்று இன்டர்பேல் பேலீசாருக்கு சவால் விடும் வகையில் தெடர் சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு நபராகவே மாறியிருக்கிறார்.

'கைலாசா' என்ற ஒரு நாட்டை நித்யானந்தா உருவாக்க இருக்கிறார் என்ற பேச்சும் அடிபட்டது. அதற்கு ஏற்றார் பேல தனி பாஸ்பேர்ட், தனி சின்னங்கள், அமைச்சரவை என தனி நாடு அமைக்கப்போவதாக செய்திகள் வெளியானது.

இந்திய அளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் `கைலாசா என்ற ஹேஷ்டேக் முதல் 10 இடத்துக்குள் இருக்கிறது.

இந்த தனி நாடு விவகாரம் குறித்து ட்விட்டரில் துடிப்பாக இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், "தனது இரட்டை குடியுரிமை என்பது இந்தியாவில் ஒரு விஷயம் அல்ல. விசா பெறுவதற்கான நடைமுறை என்ன ? அல்லது விரைவில் நடைமுறைக்கு வர இருக்கிறதா?" என கேள்வி எழுப்பி உள்ளார்.

அஷ்வினின் பதிவுக்கு ஏராளமானவர்கள் பதில் அளித்துள்ளனர். அஷ்வின், நீங்கள் பார்வையிடப்போகிறீர்களா? இல்லை அங்கே குடியுரிமை வாங்கப் போகிறீர்களா? என சிலர் கமென்ட் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com