பிரதமர் வருகையின் போது எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை - டி.ஜி.பி சைலேந்திரபாபு

பிரதமர் வருகையின் போது எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை என டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
பிரதமர் வருகையின் போது எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை - டி.ஜி.பி சைலேந்திரபாபு
Published on

சென்னை,

சென்னையில் டி.ஜி.பி சைலேந்திரபாபு நிருபர்களை சந்தித்து கூறியதாவது,

பிரதமர் வருகையின் போது குளறுபடி நடந்ததாக எந்தவிதமான தகவலும் இல்லை. நல்லமுறையில் நடந்தது. அது தொடர்பாக எந்த தகவலும் இல்லை.

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் காவல்துறை பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பு உபகரணம் உள்பட எல்லா உபகரணங்களும் அது எந்த நிலையில் உள்ளது என்று கடுமையாக பரிசோதித்து (ஆடிட்) செய்து அதில் சில உபகரணங்கள் காலாவதியாகிவிட்டது என்றால் அதை மாற்றி புதிய உபகரணங்கள் வாங்குவதற்கான நடைமுறை 100 ஆண்டுகளுக்கு மேலாகவே உள்ளது.

தமிழகத்தில் தான் உயர்தர பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன. அதுமட்டும் இல்லை தமிழ்நாட்டில் தான் அதிகமான எண்ணிக்கையில் தரமான உபகரணங்கள் இருக்கு என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com