சாகித்திய அகாடமியின் பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

சாகித்திய அகாடமியின் பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சாகித்திய அகாடமியின் பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
Published on

சென்னை,

சாகித்திய அகாடமியின் பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "2023 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகடாமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது 'ஆதனின் பொம்மை' என்ற நாவலுக்காக உதய சங்கருக்கு வழங்கப்பட்டு இருப்பதும்,

யுவ புரஸ்கார் விருது 'திருக்கார்த்தியல்' என்ற சிறு கதைக்காக ராம் தங்கத்துக்கு வழங்கப்பட்டு இருப்பதும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.

இவர்கள் இருவரும் மேலும் பல விருதுகளை பெற்று, தமிழ்நாட்டிற்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்க்க எனது நல்வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com