கொரோனா பரிசோதனை முடிவுக்கு பின் சேலம் புறப்பட்டு சென்ற ஓ.பன்னீர்செல்வம்

கொரோனா பரிசோதனை முடிவுக்கு பின் ஓ.பன்னீர்செல்வம் சேலம் புறப்பட்டு சென்றார்.
கொரோனா பரிசோதனை முடிவுக்கு பின் சேலம் புறப்பட்டு சென்ற ஓ.பன்னீர்செல்வம்
Published on

சென்னை,

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கார் டிரைவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் ஓ.பன்னீர்செல்வம் தனக்கும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அந்த முடிவு நேற்று பகலில் கிடைத்தது. அதில் அவருக்கு நெகட்டிவ் அதாவது கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த முடிவு கிடைத்த உடன் உடனடியாக அவர், தாயாரை இழந்து தவிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் கூறுவதற்காக பகல் 1 மணி அளவில் சேலம் புறப்பட்டுச் சென்றார்.

அவருடன் அ.தி.மு.க.வின் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களான ஜே.சி.டி.பிரபாகர், மாணிக்கம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் மற்றும் ஜக்கையன் எம்.எல்.ஏ. ஆகியோரும் உடன் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com