வாய்க்கால் தூர்வாரும் பணி

திருவையாறு அருகே வாய்க்கால் தூர்வாரும் பணியை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தா.
வாய்க்கால் தூர்வாரும் பணி
Published on

திருவையாறு;

திருவையாறு அருகே வாய்க்கால் தூர்வாரும் பணியை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தா.

தூர்வாரும் பணிகள்

காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்துக்காக திருச்சி மண்டலத்தில் 4004.83 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ. 80 கோடி மதிப்பில் 636 பணிகளும், சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட கடலூர் மாவட்டத்தில், 768.30 கிலோ மீட்டர் தூரத்துக்கும் ரூ.10 கோடி மதிப்பில் 55 பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, அரசு பட்ஜெட்டில் நிதி ஓதுக்கீடு செய்தது.அதன்பேரில் தஞ்சை மாவட்டத்துக்கு ஆனந்த் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர் திருவையாறு அருகே உள்ளவிளாங்குடி புனல்வாசல் வாய்க்காலை பார்வையிட்டு தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தா. அப்போது கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

கதவணை

வாய்க்கால் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட அதிகாரிகளிடம், விவசாயிகள் கிளை வாய்க்காலில் தூர்வாராமல் உள்ளதால் அந்த வாய்க்காலை தூர்வார வேண்டும். ஷட்டர்கள் இல்லாததால், தண்ணீர் வயல்களில் புகுந்து பயிர்கள் வீணாகி விடுகிறது. எனவே, ஷட்டர்கள் அமைக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைத்தால் தான், கூட்டு குடிநீர் திட்டத்தில் சிக்கல் இல்லாமல் தண்ணீர் கொண்டு செல்ல முடியும். எனவே, கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்க வேண்டும்.

குடிநீர் குழாய்

விளாங்குடி கிராமத்தில் தனியாக குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை கேட்ட கலெக்டர் தினேஷ்பான்ராஜ் ஆலிவர் விவசாயிகளின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என கூறினார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் இளங்கோ, உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், உதவிபொறியாளர் அன்புசெல்வன், சபரிநாதன் ஆகியோர் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com