மணிலா விதை பண்ணையில் அதிகாரி ஆய்வு

சங்கராபுரம் அருகே மணிலா விதை பண்ணையில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
மணிலா விதை பண்ணையில் அதிகாரி ஆய்வு
Published on

சங்கராபுரம்.

சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மணிலா விதை பண்ணை வயலை கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய மற்றும் மாநில திட்டம்) சுந்தரம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் விதை பண்ணை பராமரிப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து அங்கிருந்த விவசாயிகளிடம் விதை பண்ணை வயல்களில் களை நீக்குதல், நுண்ணூட்ட உரங்கள் பயன்பாடு, அதிக மகசூல் பெறுவதற்கான தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கி கூறினார். இந்த ஆய்வின் போது சங்கராபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி, துணை வேளாண்மை அலுவலர் காசி, உதவி விதை அலுவலர்கள் முருகேசன், துரை, உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com