உரக்கடைகளில் அதிகாரி ஆய்வு

நல்லம்பள்ளியில் உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
உரக்கடைகளில் அதிகாரி ஆய்வு
Published on

நல்லம்பள்ளி:-

நல்லம்பள்ளியில் உரக்கடைகளில் தர்மபுரி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உதவி இயக்குனர் தேன்மொழி தலைமையிலான அலுவலர்கள் ஒவ்வொரு உரக்கடைகளிலும் நேற்று ஆய்வு நடத்தினர். உரக்கடைகளில் உரங்களின் தரம், உரிய அளவீடு, பில் போட்டுதான் முறையாக விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்தும் அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.

ஆய்வு நடத்திய அதிகாரிகள் கூறுகையில், நல்லம்பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட உரக்கடைகள் செயல்பட்டு வருகிறது. அரசு விதிமுறையை பின்பற்றாமல் உரக்கடைகள் செயல்படுவது தெரியவந்தால் சம்மந்தப்பட்ட கடைகள் மூடி சீல் வைக்கப்படும் என்றனர். ஆய்வின் போது வேளாண்மை அலுவலர்கள் இளங்கோவன், இளவரசி, வணிகத்துறை வேளாண் அலுவலர் மணிராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com