'அஞ்சலை அம்மாளின் நினைவு தினத்தில் பெண்களின் பாதுகாப்பை மீட்டெடுக்க உறுதியேற்போம்' - விஜய்


அஞ்சலை அம்மாளின் நினைவு தினத்தில் பெண்களின் பாதுகாப்பை மீட்டெடுக்க உறுதியேற்போம் -  விஜய்
x

அஞ்சலை அம்மாளின் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.

சென்னை,

'தென்னாட்டு ஜான்சி ராணி' என்று அழைக்கப்படும் இந்திய விடுதலை போராளி அஞ்சலை அம்மாளின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை, பனையூர் அலுவலகத்தில் உள்ள அஞ்சலை அம்மாள் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.

இதற்காக படப்பிடிப்புத் தளத்திலிருந்து மதிய உணவு இடைவெளியின்போது தவெக அலுவலகம் வந்த விஜய், அஞ்சலையம்மாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, பின் மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு புறப்பட்டார்.

மேலும், இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் போராடிய எங்கள் கொள்கைத் தலைவர், விடுதலைப் போராளி, மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளோடு, அவர்களின் பாதுகாப்பையும் மீட்டெடுக்க உறுதி ஏற்போம்."

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story