

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், 79 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 77 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மூக்கையா, மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், தாட்கோ செயற்பொறியாளர் செல்லப்பாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.