குழந்தைகள் மீதான ஒடுக்குமுறையை பொறுத்துக்கொள்ள முடியாது - அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவு


குழந்தைகள் மீதான ஒடுக்குமுறையை பொறுத்துக்கொள்ள முடியாது - அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவு
x

அன்பு மாணவி தனியாக அமரவில்லை.நாங்கள் இருக்கிறோம்! இருப்போம்! என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடந்த 5-ம் தேதி பூப்பெய்தி உள்ளார். இந்நிலையில் தற்பொழுது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெறுவதால் தேர்வு எழுதுவதற்காக வகுப்பறைக்கு மாணவி வந்துள்ளார். ஆனால் மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காத பள்ளி நிர்வாகம் மாணவியை 7-ம் தேதி அறிவியல் தேர்வும், 9-ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகளையும் மற்ற மாணவிகளுடன் அமர்ந்து எழுத விடாமல் வகுப்பறை வாசலில் அமர வைத்து எழுத வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை மாணவியின் தாய் தனது செல்போனில் பதிவு செய்த வெளியிட்டதால் இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், தனியாக அமர வைக்க கூறினேனே தவிர, வெளியே தரையில் அமர வைக்க கூறவில்லை' என தாய் கூறியுள்ளார். இதனிடையே பள்லி முதல்வர் ஆனந்தியை தற்காலிக பணி நீக்கம் செய்து பள்ளியின் தாளாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தநிலையில், குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும், அதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:- தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது,ஏற்க முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை நாங்கள் இருக்கிறோம். இருப்போம் என பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story