ஊராட்சிகளில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்

ஊராட்சிகளில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.
ஊராட்சிகளில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்
Published on

கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் போலீசார் இடையேயான கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூரில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் ஊராட்சிகளில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். கஞ்சா, சாராயம் போன்ற போதைப்பொருட்கள் விற்பவர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும். மாவட்டத்தில் தற்கொலை சம்பவங்கள் நடக்காத வகையில் கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தனியாக அனுப்பக்கூடாது

கிராமப்பகுதிகளில் தங்களது குடும்பத்தில் குழந்தைகள் இருந்தால் நீர்நிலைகள் அல்லது தண்ணீர் தேங்கிய பகுதிகளில் குளிக்கவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ தனியாக அனுப்பக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் (தலைமையிடம்), உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பழனிச்சாமி (பெரம்பலூர்), ஜனனிபிரியா (மங்களமேடு), வளவன் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்) மற்றும் பெரம்பலூர் மாவட்ட தலைமையிட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன், டவுன் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com