நாடாளுமன்றத் தேர்தல்: அ.தி.மு.க.வில் விருப்ப மனுக்களை பெறுவதற்கான கால அவகாசம் 6-ம் தேதி வரை நீட்டிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் 1,400-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு பெற்றுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல்: அ.தி.மு.க.வில் விருப்ப மனுக்களை பெறுவதற்கான கால அவகாசம் 6-ம் தேதி வரை நீட்டிப்பு
Published on

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அ.இ.அ.தி.மு.க சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தங்களுடைய விருப்ப மனுக்களை தலைமை அலுவலகத்தில் 21.2.2024 முதல் 1.3.2024 வரை வழங்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன்படி ஏராளமானோர் தங்களுடைய விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கழகத்தின் சார்பில் விருப்ப மனு பெறும் கால அளவை நீட்டித்துத் தருமாறு கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தொடர்ந்து விடுத்து வரும் வேண்டுகோளினை ஏற்று, (6.3.2024) புதன்கிழமை மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

ஆகவே, கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், மேற்கண்ட தேதிக்குள் உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com