மதுராந்தகம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக எடுக்கப்பட்ட பள்ளத்தால் பொதுமக்கள் அவதி

மதுராந்தகம் அடுத்த தேசிய நெடுஞ்சாலை சென்னை -திருச்சி சாலையோரத்தில் அபாயகரமான பள்ளம் உள்ளது. அதில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
மதுராந்தகம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக எடுக்கப்பட்ட பள்ளத்தால் பொதுமக்கள் அவதி
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தெற்கு பைபாஸ் சாலையில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில்சாலையோரத்தில் ஒரு கிலோமீட்டருக்கு பள்ளம் எடுத்து 7 மாதங்கள் ஆகிறது. இதுவரை சாலை அமைக்கபப்படவில்லை பள்ளம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

சாலையை ஒட்டி உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து அதிகமாக உள்ளபோது அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.

அருகிலேயே துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஆர்டிஓ, அலுவலகம், தாசில்தார் அலுவலகம், கோர்ட்டுகள், உள்ளது. பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அனைவரும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் நெடுஞ்சாலை துறையினரை கேட்டால் விரைவில் வேலை செய்வோம் என்று கூறுகிறார்கள். ஆனால் இதுவரை வேலை தொடங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் விபத்து பகுதியாக காட்சி அளிக்கிறது. உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என மதுராந்தகம் வியாபாரி சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com