ஆரணியில் கருணை கொலை செய்ய மூதாட்டி, கலெக்டருக்கு மனு

ஆரணியில் கருணை கொலை செய்ய மூதாட்டி, கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளார்.
ஆரணியில் கருணை கொலை செய்ய மூதாட்டி, கலெக்டருக்கு மனு
Published on

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை கிழக்கு தெரு பெரியார் நகரை சேர்ந்தவர் சின்னகுழந்தை (வயது 95). இவரது கணவரான தர்மன் இறந்துவிட்டார். இவர்களுக்கு நடராஜன், ராஜேந்திரன், குமரேசன் என 3 மகன்கள். இதில் குமரேசன், நடராஜன் ஆகியோர் இறந்துவிட்டனர். இதனால் மற்றொரு மகனான ராஜேந்திரன் அரவணைப்பில் சின்னகுழந்தை வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு நடராஜனின் மகனும், சின்னகுழந்தையின் பேரனுமான கார்த்தி என்பவர் மூதாட்டிக்கு புற்று நோயால் கண் பார்வை இழந்துள்ளதை பயன்படுத்தி மூதாட்டி பெயரில் உள்ள வீட்டின் சொத்தை தனது பெயருக்கு எழுதி வாங்கி அதனை ஆரணி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.

இதனை அறிந்த ராஜேந்திரன் மற்றும் சின்னகுழந்தை அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆரணி சப்-கலெக்டர் தனலட்சுமியிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தன்னுடைய சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கிய பேரனிடம் இருந்து சொத்தை மீட்டுத்தர மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத்தினாலும், கண்பார்வை இழுந்ததால் வாழ பிடிக்கவில்லை. இதனால் தன்னை கருணை கொலை செய்ய மாவட்ட கலெக்டருக்கு பதிவு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com