பெட்ரோல், டீசல் விலை 3 நாட்களில் சராசரியாக 60 காசுகள் உயர்வு

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்ந்து 3வது நாளாக விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை 3 நாட்களில் சராசரியாக 60 காசுகள் உயர்வு
Published on

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து விற்பனை செய்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்யும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றன.

கொரோனா பரவல் எதிரொலியாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கால் சாலை போக்குவரத்து பெருமளவில் குறைந்தது. பொதுமக்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக வாகனங்களை பயன்படுத்தும் வழக்கத்திற்கு வந்தனர். இதனால், கடந்த மே 3ந்தேதிக்கு பின்னர் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி இருந்தது.

இந்நிலையில், சென்னையில் கடந்த 7ந்தேதி பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 53 காசுகள் விலை உயர்ந்து ரூ.75.54க்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் 52 காசுகள் விலை உயர்ந்து ரூ.68.22க்கு விற்பனையானது. இந்த விலை உயர்வு நேற்றும் காணப்பட்டது.

சென்னையில் இன்று 3வது நாளாக இவற்றின் விலை உயர்ந்து உள்ளது. பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 48 காசுகள் விலை அதிகரித்து ரூ.77.08க்கும், டீசல் 49 காசுகள் விலை அதிகரித்து ரூ.69.74க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 54 காசுகள் விலை உயர்ந்து ரூ.73க்கும், டீசல் 58 காசுகள் விலை உயர்ந்து ரூ.71.17க்கும் இன்ற விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று மும்பையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 52 காசுகள் விலை உயர்ந்து ரூ.80.01க்கும், டீசல் 55 காசுகள் விலை உயர்ந்து ரூ.69.92க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 3 நாட்களில் இவற்றின் விலை சராசரியாக 60 காசுகள் உயர்ந்து உள்ளது. இதன்படி, 3 நாட்களில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.1.74 மற்றும் டீசல் ரூ.1.78 விலை உயர்ந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com