3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

கம்பம் நகராட்சி பகுதியில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.
3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
Published on

கம்பம் நகராட்சி மற்றும் பீ சேஞ்ச் அறக்கட்டளை இணைந்து 'எங்களுடன் இணையுங்கள்' திட்டத்தின் கீழ் 33 வார்டுகளிலும் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க நிகழ்ச்சி நந்தகோபால்சாமி நகர் பூங்கா அருகே நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை தாங்கினார்.

நகராட்சி ஆணையாளர் பாலமுருகன், அறக்கட்டளை நிர்வாகி முரளி கிருஷ்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி செல்வேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன், டாக்டர் ஆனந்த், முன்னாள் நகராட்சி தலைவர்கள் பாஸ்கரன், ராஜாமணி, இளங்கோவன், சிவக்குமார், மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் ஜெயபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். தொடர்ந்து மரக்கன்றுகளை அவர்கள் நட்டு வைத்தனர். நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com