பிளஸ் 2 செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்; அரசு தேர்வு துறை இயக்குனர் தகவல்

பிளஸ் 2 செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என அரசு தேர்வு துறை இயக்குனர் தகவல் தெரிவித்து உள்ளார்.
பிளஸ் 2 செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்; அரசு தேர்வு துறை இயக்குனர் தகவல்
Published on

சென்னை,

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக அரசு தேர்வு துறை பணியாளர்களும் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கின்றனர். இந்த நிலையில் வருகிற 1ந்தேதி முதல் பிளஸ் 2 செய்முறை தேர்வு நடைபெற இருக்கிறது.

ஆசிரியர்கள், தேர்வுத்துறை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் செய்முறை தேர்வில் பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து அரசு தேர்வு துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவியிடம் கேட்டபோது, பிளஸ் 2 செய்முறை தேர்வு ஏற்கனவே அறிவித்த நாட்களில் திட்டமிட்டபடி நடக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com