நாளை மின்சாரம் நிறுத்தம்

திண்டுக்கல், இடையக்கோட்டை பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளை மின்சாரம் நிறுத்தம்
Published on

திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி திண்டுக்கல் நகர் பகுதிகள், என்.எஸ்.நகர், ரோஜாநகர், இ.பி.காலனி, அங்குநகர், செட்டிநாயக்கன்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி, குரும்பபட்டி, பொன்மாந்துறை, விராலிப்பட்டி, நந்தவனப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை திண்டுக்கல் அங்குநகர் மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் இடைக்கோட்டை அருகே உள்ள சின்னக்காம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெறுகிறது. இதையொட்டி இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, மாம்பாறை, சின்னக்காம்பட்டி, கொ.கீரனூர், குத்திலிப்பை, சாமியாடிபுதூர், ஐ.வாடிப்பட்டி, நரசிங்கபுரம், கொங்கபட்டி, ஜவ்வாதுபட்டி, அண்ணாநகர், புல்லாகவுண்டனூர், நவக்கானி, சோளியப்பகவுண்டனூர், இ.அய்யம்பாளையம், நாரப்பநாயக்கன்பட்டி, அத்தப்பன்பட்டி, எல்லப்பட்டி, இடையன்வலசு, இ.கல்லுப்பட்டி, பெருமாள்கவுண்டன்வலசு, கக்கரநாயக்கனூர், வலையபட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று ஒட்டன்சத்திரம் கிராமிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com