நாளை மின்சாரம் நிறுத்தம்

வடமதுர, எரியோடு ஆகிய பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளை மின்சாரம் நிறுத்தம்
Published on

வடமதுரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி வடமதுரை, புத்தூர், போஜனம்பட்டி, காணப்பாடி, வேலாயுதம்பாளையம், மோர்பட்டி, ஆலம்பட்டி, சடையம்பட்டி, தென்னம்பட்டி, பிலாத்து, அழகர்நாயக்கன்பட்டி, வெள்ளபொம்மன்பட்டி, ஊராளிபட்டி, தும்மக்குண்டு, சீத்தப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை வடமதுரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

இதேபால் எரியோடு அருகே உள்ள கோவிலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி ஆர்.கோம்பை, புளியம்பட்டி, வடுகம்பாடி, குஜிலியம்பாறை, ஆர்.புதுக்கோட்டை, பில்லமநாயக்கன்பட்டி, கோவிலூர், உசிலம்பட்டி, குளத்துப்பட்டி, வள்ளிப்பட்டி, சத்திரப்பட்டி, சின்னலூப்பை, அழகாபுரி, ஆர்.வெள்ளோடு, குவாரி மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை கோவிலூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜய் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com