கரூர், அரவக்குறிச்சி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

கரூர், அரவக்குறிச்சி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
கரூர், அரவக்குறிச்சி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
Published on

கரூர் துணைமின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கரூர் காமராஜபுரம், செங்குந்தபுரம், ஜவகர்பஜார், திருமாநிலையூர், ரத்தினம்சாலை, கோவைரோடு, திருக்காம்புலியூர், ஆண்டாங்கோவில் ரோடு, செல்லாண்டிபாளையம், சுக்காலியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.இதேபோல் பள்ளப்பட்டி, கருங்கல்பட்டி, செல்லிவலசு, அரவக்குறிச்சி ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, மண்மாரி, பெரியசீத்தப்பட்டி, சவுந்திராபுரம், ஈசநத்தம், முத்துக்கவுண்டனூர், சந்தைப்பேட்டை, இனுங்கனூர், வெடிகாரன்பட்டி, தலையாரிபட்டி, பாறையூர், விராலிபட்டி, குறிகாரன்வலசு, கரடிபட்டி, பெரியவலையபட்டி, ஆர்.பி.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com