சிவன் கோவிலில் பிரதோஷ பூஜை

கோத்தகிரி சக்தி மலை முருகன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷ நாளான நேற்று மாலை லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சிவன் கோவிலில் பிரதோஷ பூஜை
Published on

ஒவ்வொரு மாதமும் சிவன் கோவில்களில் பிரதோஷம் மற்றும் சனி பிரதோஷ நாட்களில் யாக பூஜை, அபிஷேக பூஜை நடத்தப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

இதையொட்டி ஐப்பசி மாத பிரதோஷ நாளான நேற்று கோத்தகிரி சக்தி மலையில் உள்ள சிவன் கோவிலில் மாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை லிங்கேஸ்வரருக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் அபிஷேக பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

மேலும் சிவபெருமானின் வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு, எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அருகம்புல் சாற்றி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதே போல கோத்தகிரி கடை வீதி மாரியம்மன் கோவிலில் உள்ள லிங்கேஸ்வரருக்கும் ஐப்பசி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இந்த பிரதோஷ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து கலந்துகொண்டு லிங்க வடிவத்தில் காட்சி அளித்த சிவபெருமானை வழிபட்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com