பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவு: இரங்கல் தெரிவித்த வைரமுத்து

பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவு: இரங்கல் தெரிவித்த வைரமுத்து
Published on

சென்னை,

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷின் தாயார் அம்சவேணி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அம்சவேணி, அண்மைக்காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அம்சவேணி இன்று காலை காலமானார். அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

"தே.மு.தி.க-வின்

பொதுச்செயலாளர்

சகோதரி பிரேமலதா விஜயகாந்த்

மற்றும் எல்.கே.சுதீஷ்

இருவரின் அன்னையார்

திருமதி. அம்சவேணி

அம்மையார் அவர்கள்

மறைவுற்ற செய்தி

மனவருத்தம் தருகிறது

அன்னையார் மறைவு

எத்துணை துயரம் தரும் என்பதை

அன்னையைப் பறிகொடுத்த

அனைவரும் அறிவார்கள்;

நானும் அறிந்தவன்தான்

பெற்று வளர்த்துப்

பெயர்சூட்டிக் கல்விதந்து

பெருவாழ்வு தந்துசென்ற

அன்னையாரின் மறைவுத் துயரத்தில்

நானும் பங்கேற்கிறேன்

தனித்து நின்றும்

பொதுவாழ்வில் களமாடும்

போர்மகளை ஈன்றுதந்த

அம்மையாரின் உயிர்

அமைதி அடைக

ஆழ்ந்த இரங்கல்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com