தனியார் ஆம்புலன்ஸ் கட்டணக் கொள்ளையை தடுக்க வேண்டும்: முதல்-அமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

தனியார் ஆம்புலன்ஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு ஒ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளை ஏற்றி செல்லும் தனியார் ஆம்புலன்ஸ்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்து உள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பிறப்பித்த உத்தரவில், கொரோனா நோயாளிகளை அழைத்து செல்ல சாதாரண ஆம்புலன்ஸ்களில் முதல் 10 கி.மீ.,க்கு ரூ.1,500 ஆகவும், பிறகு கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா ரூ.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆக்சிஜன் உள்ளிட்ட அடிப்படை உயிர்காக்கும் கருவிகள் கொண்ட ஆ்மபுலன்ஸ்களுக்கு முதல் 10 கி.மீ.,க்கு 2 ஆயிரம் ரூபாய் ஆகவும், பிறகு ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா ரூ.50 ஆகவும், வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆமபுலன்ஸ்களுக்கு முதல் 10 கி.மீ.,க்கு ரூ.4 ஆயிரம் ஆகவும், பிறகு ஒவ்வொரு கி.மீ.,க்கும் ரூ.100 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தனியார் ஆம்புலன்ஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, முன்னாள் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டரில், கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் ஆம்புலன்ஸ்களில் பல மடங்கு அதிக கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இதனை விசாரித்து முறைப்படுத்த வேண்டும் என்று ஒ.பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com