அடிக்கடி விபத்து ஏற்படும் கூவம் சந்திப்பு சாலையில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அடிக்கடி விபத்து ஏற்படும் கூவம் சந்திப்பு சாலையில் உயர் கோபுர மின்விளக்கு வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடிக்கடி விபத்து ஏற்படும் கூவம் சந்திப்பு சாலையில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
Published on

பேரம்பாக்கம்,

பூந்தமல்லியில் இருந்து அரக்கோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கூவம் கிராமம் மும்முனை இணைப்பு சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலை பகுதியில் குறுகிய வளைவு ஒன்று உள்ளது. இந்த வழியாக தினந்தோறும் பள்ளி, கல்லூரி, வாகனங்கள், தனியார் தொழிற்சாலை வாகனங்கள், பஸ்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது.

இந்த குறுகிய வளைவில் திரும்பும் போது குறுகிய வளைவு உள்ளதை அறியாமல் வாகனங்களை கட்டுப்படுத்த முடியாமல் வாகனத்தை ஓட்டுபவர்கள் நிலைத்திடுமாறி விழுந்தும், எதிரே வரும் வாகனங்கள் மீது மோதியும் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவது தொடர்கதையாகி உள்ளது. இதுவரையில் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் இந்த குறுகிய வளைவில் திரும்பும் போது விபத்தில் சிக்கியுள்ளனர்.

சாலையின் வளைவு பகுதியில் எச்சரிக்கை பலகை இல்லாததும், அந்த வளைவின் ஓரத்தில் மின்விளக்கு வசதிகள் இல்லாததுமே விபத்துகளுக்கு காரணம் என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சாலையோரத்தில் முட்செடிகள் வளர்ந்துள்ளது.

தொடர் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூவம் பகுதியில் ஆபத்தான வளைவில் 2 புறங்களிலும் அபாயகரமான வளைவு உள்ளது என அறிவிப்பு பலகையும், உயர்மின்கோபுர மின்விளக்கு வசதியும், நெடுஞ்சாலை ஓரம் வளர்ந்துள்ள முச்செடிகளை அகற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூவம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com