அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது.
அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு
Published on

காரைக்குடி

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி வாயிலாக டிசம்பர் 2022-ல் நடைபெற்ற முதுநிலை பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மறுமதிப்பீட்டிற்கு நேரடியாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தேர்வு முடிவு வெளியான 7 நாட்களுக்குள் பாடம் ஒன்றுக்கு ரூ.600 இணையதளம் வழியே செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவர்கள் தேர்வு முடிவு வெளியான 7 நாட்களுக்குள் விடைத்தாள் நகல் ஒன்றுக்கு ரூ.500 இணையதளம் வழியாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்ற பின்பு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விடைத்தாள் நகல் பெற்ற நாளிலிருந்து 7 தினங்களுக்குள் பாடம் ஒன்றுக்கு ரூ.500 இணையதளம் வழியாக செலுத்தி விண்ணப்பிக்கவும். தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை பல்கலைக்கழக தேர்வாணையர் கண்ணபிரான் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com