

சென்னை,
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவியில் இருந்து விலக்கக்கோரி பென்சன் பெறுவோர் சங்க பொதுச்செயலாளர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரி பல்கலைக்கழக மானியகுழு விதிகளை மீறி பதவி அமர்த்தப்பட்ட மோகனின் நியமனம் சட்டவிரோதமானது என்றும், பல்கலைக்கழக மானியக்குழு விதிகளை பின்பற்றி புதிய துணை வேந்தரை நியமிப்பதற்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக புதுச்சேரி அரசு, பல்கலைக்கழகம் மற்றும் துணைவேந்தர் மோகன் ஆகியோர் 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.