கோவில் திருவிழாவில் தகராறு

திருக்காட்டுப்பள்ளி அருகே கோவில் திருவிழாவில் தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கோவில் திருவிழாவில் தகராறு
Published on

திருக்காட்டுப்பள்ளி;

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பாட்டுக்கச்சேரி நடைபெற்றது. அப்போது இடையூறு செய்த சானுரப்பட்டி முருகன் காலனியை சேர்ந்த தங்கபாண்டி(வயது31) என்பவரை கண்டமங்கலம் பரமேஸ்வரன் காலனியைச் சேர்ந்த ஸ்ரீராம் (20) மற்றும் பலர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தங்கபாண்டிக்கு உதட்டில் ரத்தகாயம் ஏற்பட்டது. காயமடைந்த தங்கபாண்டியை திருக்காட்டுப்பள்ளியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாகனத்தில் ஏற்றி விட்டு காத்திருந்த போது வாகன ஓட்டுநர் ஏட்டு திருமாவளவனை (28) சிலர் சட்டையை பிடித்து இழுத்து பணி செய்ய விடாமல் தடுத்து வாகன கண்ணாடிமீது கல்வீசி தாக்கி உள்ளனர். இதுகுறித்து தங்கபாண்டி மற்றும் போலீஸ் வாகன ஓட்டுநர் திருமாவளவன் ஆகியோ தனித்தனியாக திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டமங்கலம் பரமேஸ்வரன் காலனியைச் சேர்ந்த மதன் (21) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com