கேரள மாநிலம் சேத்துக்குளியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓட்டுநர் மீது இனவெறி தாக்குதல் - சீமான் கண்டனம்

தமிழ் ஓட்டுநர் மீது இனவெறியுடன் கொடுந்தாக்குதல் நடத்தியுள்ள கேரள மாநிலத்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலம் சேத்துக்குளியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓட்டுநர் மீது இனவெறி தாக்குதல் - சீமான் கண்டனம்
Published on

சென்னை,

தமிழ் ஓட்டுநர் மீது இனவெறியுடன் கொடுந்தாக்குதல் நடத்தியுள்ள கேரள மாநிலத்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேரள மாநிலம் சேத்துக்குளியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓட்டுநர் மீது இனவெறி மனப்பான்மையுடன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அதனை தடுக்க முயன்ற தமிழ்ப் பெண் தொழிலாளர்களையும் தாக்குதலில் ஈடுபட்ட மலையாளிகள் ஆபாசமாக திட்டி மிரட்டியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆந்திர காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து தொல்தமிழ் குறவர்குடி மக்களைத் தாக்கி, பெண்களை வன்புணர்வு செய்த கொடுமைகளைத் தடுக்கத்தவறி கைகட்டி வேடிக்கைப் பார்த்த திமுக அரசு, தற்போது கேரளாவில் தமிழ் ஓட்டுநர் தாக்கப்படுவதையும் கண்டிக்காமல் வேடிக்கைப்பார்ப்பது தமிழ்நாட்டில் நடைபெறுவது தமிழர்களுக்கான ஆட்சியா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது?

தமிழ் ஓட்டுநர் மீது இனவெறியுடன் கொடுந்தாக்குதல் நடத்தியுள்ள கேரள மாநிலத்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com